நமக்கு இன்றுதானே காதலர் தினம்.
நீ உன் காதலை எனக்கு தெரிவித்த நாள் தானே நமக்கு காதலர் தினமாக இருக்க முடியும்.
என்னை பொறுத்தவரை இந்த தினம் தான் எல்லா வருடங்களும் நமக்கு காதலர் தினம்.
இத்தனை ஆண்டுகளாய் அப்படித்தான் இருந்தது. இனியும் அப்படித்தான் இருக்கும்.
உன் காதலை உணர்ந்த அந்த ஒரு நொடி போதும் எனக்கு.
ஒட்டு மொத்த காதலர் தினங்களையும் ஒன்றாய் கொண்டாடிய மகிழ்ச்சி அது.
ஆனால் உன் காதலை அறிந்த அந்த நொடி என் கண்கள் சிந்திய கண்ணீர் துளிகளுக்கு என்ன அர்த்தம்?
யோசித்து பார்த்தேன்.
அதன்பின் தான் புரிந்தது. அதற்கு பெயர்தான் ஆனந்த கண்ணீர் என்று. எனக்கு தெரிந்து என் கண்கள் சிந்திய முதல் ஆனந்த கண்ணீர் கூட அதுவாகத்தான் இருக்க முடியும்.
நான்கு வருடங்களாய் என் மனதில் இருந்த காதல் உன் மனதிலும் இருக்கிறதா என்று தெரியாமல் நான் தவித்த தவிப்பு எனக்குதான் தெரியும்.
இன்று சொல்வாயா, நாளை சொல்வாயா, இல்லை என்னைப் போல் உன் மனதில் காதலே இல்லையா என்று தினம் தினம் ஏங்கி தவித்துக் கொண்டிருந்த என் காதலுக்கு உன் காதல் தெரிந்ததும் அந்த பேரானந்தத்தில் செய்வதறியாது திகைத்து நின்றேன்.
அப்பொழுது என் காதல் என் கண்களில் கண்ணீர் துளிகளாய் தான் வெளிப்பட்டது.
நல்ல வேளை. உன் காதலை இரண்டு நாட்கள் கழித்து சொல்லாமல் விட்டாய்.
அப்படி சொல்லியிருந்தால் அனைத்து காதலர்களும் கொண்டாடும் அதே தினத்தில் தான் நாமும் நம் தினத்தை கொண்டாடி இருக்கக் கூடும்.
தனிமையை அதிகம் விரும்பும் நமக்கு இப்படி ஒரு தனித்த காதலர் தினம் கிடைக்காமலே போயிருக்கும்.
இதென்ன நீ முன்னதாகவே திட்டம் போட்டு செய்த வேலையா? இல்லை கடவுள் நமக்கென்று கொடுத்த அதிர்ஷ்ட தினமா?
நேற்று உன்னிடம் சொன்னேன். நாளை நமக்கு காதலர் தினம் என்று.
என்னை கேலி செய்தாய்.
ஆனால் இன்று காலை எதிர்பாரா விதமாய் மின்னஞ்சலில் உன் வாழ்த்துக்களை பார்த்தேன்.
"அன்புள்ள காதலிக்கு,
உன் இந்நாள் காதலன் வருங்கால கணவனின் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.....
ஐ லவ் யு"
உன் இந்நாள் காதலன் வருங்கால கணவனின் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.....
ஐ லவ் யு"
ஐயோ. என்னை அறியாமல் வரும் புன்னகையைப் பாரேன்.
அந்த புன்னகையிலும் கூட கண்கள் கலங்கத்தான் செய்கிறது.
உன்னோடு ஒரே இம்சையடா.
இப்படி சிரித்துக்கொண்டே கண் கலங்க வைக்கிறாய்.
ம்ம்ம். இருக்கட்டும். இதைப்போல இன்னொரு சந்தர்ப்பத்தில் கண் கலங்க வேண்டியிருக்கும்.
உன் காதல் அனைத்தையும் தாலியில் கோர்த்து என் கழுத்தில் அணிவித்து என்னை உன் மனைவியாக ஏற்கும் அந்த நொடிகளில்.
அதற்கான ஒத்திகையாய் இதை நினைத்துக் கொள்கிறேன்.
உயிரானவனே...
என் ஒட்டு மொத்த அன்பையும் பெறுவதற்காக பிறந்தவனே...
என் இதயத்தில் நுழைந்து இம்சித்துக் கொண்டிருப்பவனே...
காதலின் அர்த்தத்தை எனக்கு புரிய வைத்தவனே...
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
.
























20 comments:
வாழ்த்துக்கள் தோழி...
உங்கள் மனம் போல மணவாழ்க்கை அமைய எனது வாழ்த்துக்கள்...
அருமை சகோ,உங்கள் இருவருக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள் சகோ... :))
காதல் மணம் கமழும் கவிதை!
ரொம்ப நல்லா இருக்கு...
என்ன ஜெ ஜெ, கொஞ்ச நாளா எழுத்து பக்கம் ஆளை காணோம்....???
இருங்க படிச்சிட்டு வர்றேன்...
//என்னை பொறுத்தவரை இந்த தினம் தான் எல்லா வருடங்களும் நமக்கு காதலர் தினம்//
இதுதான் கரெக்ட்டு...
என்னடா காதலர் தினம் வரப் போகுது, காதலை ஒட்டு மொத்தமா குத்தகைக்கு எடுத்தவங்கள்ட்ட இருந்து பதிவேதும் வரலையேன்னு யோசிச்சிட்டே இருந்தேன்.... சரியா ஒரு பதிவைப் போட்டு கலக்கிட்டீங்க....
என்ன சொல்ல உங்க பதிவைப் பத்தி, வழக்கம் போல ரொம்ப அருமையா இருக்கு ஜெ ஜெ :-)
உங்களுடைய இன்றைய காதல் தின வாழ்த்துக்கள். பதிவு super wish you happy yours valentines day
சும்மா கலக்கிட்டீங்க ..!! வாழ்த்துக்கள்
@ ஜெயந்த்
//உங்கள் மனம் போல மணவாழ்க்கை அமைய எனது வாழ்த்துக்கள்...//
வாழ்த்துக்களுக்கு நன்றி தோழா
@மாணவன்
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ
@கருன்
நன்றி.......
@நாஞ்சில் மனோ
//என்ன ஜெ ஜெ, கொஞ்ச நாளா எழுத்து பக்கம் ஆளை காணோம்....???//
கொஞ்சம் இடைவெளி விட்டு எழுத எண்ணினேன். அதனால் தான்.
@எவனோ ஒருவன்
நன்றி அண்ணா. காதலர் தினத்துக்கு உங்ககிட்ட இருந்து ஒரு கதையை எதிர் பாக்கலாமா?
@sultanonline
வாழ்த்துக்களுக்கு நன்றி..
@ ஜெய்லானி
நன்றி....
இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
@ siva:
நன்றி :)
Konda kaadhalum...
kondirukkum anbum
Endrum Nilaithirukka en vaazhukkal.
@ Thanjai Vasan (தஞ்சை.வாசன்):
வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ..
neengal pallandu sernthu vaala vendum..
Post a Comment