Thursday, April 7, 2011

மனோதத்துவம்


நம்மில் பலர் மனம் சோர்வடைந்து, தான் என்ன செய்கிறோம் என்பதே புரியாமல், தான் செய்வது சரிதானே என்பதும் தெரியாமல் குழம்பி தவிக்கின்றனர்.

சமீபத்தில் எனக்கு ஒரு புத்தகம் கிடைத்தது. புத்தகத்தின் பெயர் "மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்". இதை எழுதியவர் கோவை அரசு கல்லூரியைச் சேர்ந்த  பேராசிரியர் "பா. செல்வராஜ்" அவர்கள்.

இந்த புத்தகம் படித்த பின்னர் என் மனம் சிறிது தெளிவு பெற்றது. நான் செய்யும் செயல்கள் சரிதான் என்பது புரிந்தது. பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் ஓடி ஒளிவதா என்ற என் கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் பதில் கிடைத்தது.

என் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் அனைவருக்கும் இந்த புத்தகத்தை பரிசளிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அது இயலாத காரியம். அதனால் நான் படித்து பயனுற்ற செய்திகளை இந்த வலை தளத்தில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த பதிவுகளை படிப்பவர்கள் மனம் நிச்சயமாக தெளிவு பெரும்.

ஒரு புத்தகத்தைப் படித்து அதில் உள்ள செய்தியை தளத்தில் எழுதுவது சரிதானா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இதைப் படிப்பதால் நண்பர்களின் மனம் தெளிவு பெரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

குழம்பி தவிக்கும் மனங்களை தெளிவு படுத்த நான் எடுக்கும் ஒரு சிறு முயற்சி இது. அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


10 comments:

ரேவா said...

உனது பகிர்வை எதிர்பார்க்கிறேன் தோழி

ஜெ.ஜெ said...

ம்ம்ம்...

MANO நாஞ்சில் மனோ said...

போடுங்க போடுங்க பதிவை...

ஜெ.ஜெ said...

@ MANO நாஞ்சில் மனோ:

கண்டிப்பாக...

siva said...

இந்த பதிவு உலக வரலாற்றில் முதன் முறையாக அப்டின்னு விளம்பரம் போட்டு பதிவு போடுங்க

siva said...

மனமாற்றத்திற்கு புத்தங்களைவிட உங்கள் முயற்சிதான்
மிக முக்கியம் ஒரு புதிய தோழியாய் மீண்டும் புன்னகையோடு
பதிவுலகில் வலம் வர விரும்புகிறேன்

உங்கள் ஓட்டு இந்த ஜெ ஜெ வுக்கு :)

ஜெ.ஜெ said...

@ siva:

thambi.. i need ur mail id..

அப்பாவி தங்கமணி said...

உலகின் மிகசிறந்த நண்பன் புத்தகம்னு கேட்டு இருக்கேன்...அனுபவத்திலும் உணர்ந்து இருக்கேன்... சிரிப்பு அழுகை துக்கம் மகிழ்ச்சி எல்லாவற்றயும் நல்ல எழுத்தால் செய்ய இயலும்... உங்கள் மனோதத்துவ பதிவை தொடருங்கள். நன்றி...Have a good weekend...:)

மாணவன் said...

//ஒரு புத்தகத்தைப் படித்து அதில் உள்ள செய்தியை தளத்தில் எழுதுவது சரிதானா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் இதைப் படிப்பதால் நண்பர்களின் மனம் தெளிவு பெரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.//

கண்டிப்பாக பகிர்ந்துகொள்ளுங்கள் சகோ பலருக்கும் பயனுள்ளதாய் இருக்கும் :)

யார் இவன் ? said...

குழம்பி தவிக்கும் மனங்களை தெளிவு படுத்த நீங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்