Tuesday, April 12, 2011

மனோதத்துவம் - நாய் மனசு

முன்குறிப்பு: இந்த பதிவு ஒரு புத்தகத்திலிருந்து பகிரப்படும் செய்தி.

புத்தகம்: மனதை மேம்படுத்தும் மனோதத்துவம்

ஆசிரியர்: பா. செல்வராஜ்.

நாய் மனசு:

வாழ்நாளில் புதிது புதிதாக பல முயற்ச்சிகளை எடுத்து செயல்படுத்தி வெற்றி காண்பதே வாழ்க்கையை சுவாரசியமாக கொண்டு செல்ல சிறந்த வழி.  எனவே நம்மில் பலர் விரும்பி பிரச்சனைகளை தேடிச் சென்று எதிர்கொள்கிறோம். பிரச்சனைகள் வேண்டாம் என்று அமைதி வாழ்க்கையை விரும்பிச் செல்பவர்களை பிரச்சனைகள் துரத்திச் சென்று துன்புறுத்துகின்றன.

அதனால் அமைதியை விரும்புகிறவர்கள் போர்க்களத்தில் இறங்கி  பிரச்சனைகளுக்கு புறமுதுகு காட்டி ஓட புறப்பட்டு விடுகிறார்கள். ஆனால் பிரச்சனைகளை  எளிதில் சமாளிக்க வாய்ப்புகள் இருக்கும்போது கூட பலர் அவற்றை தீர்க்க முடியாமல் தன்னை பிரச்சனைகளுக்கு பலிகடாவாக்கிக் கொள்வதை  பார்த்திருக்கிறோம். ஏன் இத்தகைய வியப்பான நடத்தை மனிதர்களிடையே உள்ளது? 

இதைப் புரிந்து கொள்ள நாய்களிடையே ஒரு சோதனை நடத்தப்பட்டது.

A, B என்ற இரண்டு அறைகள் உள்ள சோதனை பெட்டி ஒன்று வடிவமைக்கப்பட்டது. அப்பெட்டியின் A அறையில் கீழ்த்தளம் இரும்பு கம்பிகளாலான வலையால் ஆனது. அக்கம்பி  வலை தரைக்கு மின்சாரம் பாய்ச்சும் வசதியுண்டு. அவ்வறையிலேயே விளக்கு  ஒன்றும் உண்டு. வேண்டும்போது அவ்விளக்கை எரியச் செய்யலாம். 

B அறையின் தரைத்தளம் மரத்தினாலானது. அங்கே மின்சாரத்தை பாய்ச்ச முடியாது. A அறையிலிருந்து B அறை உயரமற்ற பலகை ஒன்றினால் பிரிக்கப்பட்டு  இருக்கும். சுலபமாக தாண்டிக் குதித்தாலே A என்ற அறையிலிருந்து B அறைக்கு   தப்பிச் சென்று விடலாம்.

இப்போது நாயொன்றை சோதனையாளர் A அறையில் எங்கும் ஓடி வட  முடியாதபடி வார் போட்டு கட்டினார். பின்னர் சோதனையை ஆரம்பித்தார்.   சோதனையில்  முதலில் விளக்கு எரியும். அதைத் தொடர்ந்து தரை தள கம்பிகளுக்கு மின்சாரம் பாய்ச்சப்படும்.

அதன் மீது கட்டப்பட்டு நின்று கொண்டுள்ள நாய் உடலில் மின்சாரம் பாய்ந்து  துடித்தது. தொடர்ச்சியாக பல முறை இவ்வாறு விளக்கு எரிவதைத் தொடர்ந்து மின்சாரம் பாய்ச்சப்பட்டது. இப்போது நாய் விளக்கு எறிந்தவுடன் தொடர்ந்து மின்சாரம்  பாய்ச்சப்படுகிறது என்பதை புரிந்து கொண்டு விளக்கு எறிந்தவுடன் எப்படியாவது தப்பிக்கலாம் என்று முயன்றது. ஆனால் வாரினால் நன்கு கட்டப்பட்ட நாயால் தப்பிக்க முடியவில்லை.

தொடர்ச்சியாக இம்மாதிரி பல முறை செய்தவுடன் நாய் நம்மால் தப்பிக்கவே முடியாது, மின்சாரத்தை ஏற்றிக் கொள்வதுதான் வழி என்று முடிவு கட்டியது.

இப்போது சோதனையாளர் நாயை வார் கட்டிலிருந்து விடுவித்தார். தற்போது நாயால் எம்பி குதித்து B அறைக்கு ஓடிவிட முடியும்.

இப்போது விளக்கு எரிந்தது, நாய் அதைக் கண்டது, விளக்கு எரிவதைத் தொடர்ந்து மின்சாரம் பாய்ச்சப்படும் என்று நாய்க்கு நன்கு தெரியும். அவ்வாறே மின்சாரம் பாய்ச்சப்பட்டது. சற்றே எம்பிக் குதித்தால் நாய் B அறைக்கு தாண்டி  மின்சாரத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஏனெனில் அது வாரினால்      கட்டப்படவில்லை. 

ஆனால் நாய் எம்பிக் குதித்து B அறைக்கு ஓடவில்லை. வாரினால் கட்டப்பட்டு தப்பிக்க வழியில்லை என்று முடிவு கட்டிவிட்ட நாய் இப்போது வார்க்கட்டு இல்லாதபோதும் கூட பழைய பழக்கத்தினால் மின்சாரத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மின்சாரத்தை ஏற்றுக்கொண்டு துன்பப்பட்டது.

ஏனெனில் தன்னால் தப்பித்துக் கொள்ள இயலாது என்று நாய் ஒரு மனப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டதுதான் காரணம்.

இப்போது வாய்ப்பு இருந்தும் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியான  வாழ்க்கையை வாழ முடியாத மனிதர்களுக்கும், சோதனையின் நாய்க்கும்  வித்தியாசம் ஏதுமில்லை.

வாழ்க்கை சூழ்நிலையையும், நாய் சோதனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

சோதனைப் பெட்டி நாம் வாழும் சூழ்நிலை,

மின்சாரம் நமக்கு ஏற்படும் துன்பம்,

வார்க்கட்டு பிரச்சனையிலிருந்து விடுபட முடியாத நிலை,

உயரம் குறைவான பலகை பிரச்சனைகளிலிருந்து விடுபட வழி,

வார்க்கட்டு அவிழ்க்கப்பட்டது மாறிய சூழ்நிலை,

பலகையை தாண்டி நாய் குதிக்க வேண்டும்.

பிரச்சனைகளிலிருந்து விடுபட கிடைத்த வழியை நாம் பயன்படுத்த வேண்டும்.

நாய் குதிக்கவில்லை.

நாமும் வழியை பயன்படுத்துவதில்லை.

இத்தனை நாள் என்னால் தப்பிக்க முடியவில்லை. இப்போது மட்டும் முடியுமா என்று நாய் நினைக்கிறது.

பிறந்ததிலிருந்து கஷ்டப்படுகிறேன், இப்போது மட்டும் அதிலிருந்து விடுபட முடியுமா என்று நாம் நினைக்கிறோம்.

ஏன்? 

மனதால் பழகிக் கொண்ட உதவியின்மைதான் காரணம்.

எனவே சூழ்நிலை மாறிக் கொண்டே இருப்பதை விழிப்போடு கவனிப்போமானால், கட்டவிழ்ந்தால் உடனே எட்டிக் குதிப்போம்.



15 comments:

siva said...

ம் நல்ல இருக்கு ஆரம்பம்
தொடருங்கள்
அவ்வப்போது கவிதையும் வேண்டும்

ஜெ.ஜெ said...

கவிதையா?? முயற்ச்சிக்கிறேன்...

ரேவா said...

அருமையான பகிர்வு தோழி...படித்தேன் தெளிந்தேன்....

ஜெ.ஜெ said...

@ ரேவா:

மகிழ்ச்சி :)

எவனோ ஒருவன் said...

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜெ ஜெ :-)

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

சிந்திக்கத் தூண்டும் அருமையானதொரு பகிர்வு நன்றி

siva said...

அருமையான பகிர்வு தோழி...படித்தேன் தெளிந்தேன்...hahaha..sema commedy revathi..but unathu blog paatha appdi therialaiey...:)

eppadio thelintha sari..

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

Well written. Best wishes.

ஜெ.ஜெ said...

@ எவனோ ஒருவன்:

:)

இதெல்லாம் நமக்காகத்தான் அண்ணா..

ஜெ.ஜெ said...

@ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ :

சிந்திக்கத் தூண்டும் அருமையானதொரு பகிர்வு நன்றி////

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சங்கர்..

ஜெ.ஜெ said...

@ siva:

அருமையான பகிர்வு தோழி...படித்தேன் தெளிந்தேன்...hahaha..sema commedy revathi..but unathu blog paatha appdi therialaiey...:)

eppadio thelintha sari..///

இத படிச்சு நீ தெளிஞ்சியா?? மத்தவங்கள ஏன் வம்புக்கு இழுக்கிற சிவா??

போளூர் தயாநிதி said...

அருமையான பகிர்வு

இராஜராஜேஸ்வரி said...

அசத்தலான பயனுள்ள பகிர்வு. பாராட்டுக்கள்,

ரிஷபன் said...

மனதால் பழகிக் கொண்ட உதவியின்மைதான் காரணம்.

சரியாகச் சொன்னீர்கள்..
சாதிக்கும் முயற்சிக்கு மனமே உதவி.. மனமே தடையும்..

அருமையான விளக்கம் உள்ள பதிவு

Priya said...

பயனுள்ள பகிர்வு!